×

சென்னிமலை மலைக்கோவிலில் கண்ணாடியை உடைத்த குரங்கால் அரசு பஸ் விபத்து

சென்னிமலை. ஜன.24: சென்னிமலை மலைக்கோவிலில் 4வது வளைவில் பொருத்தப்பட்டிருந்த குவி கண்ணாடியை குரங்கு உடைத்தால் மலையில் இருந்து கீழே இறங்கிய அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் 9 வளைவுகள் உள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் இந்த வளைவுகளில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்களால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதைப்போக்க தனியார் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் 10 குவி கண்ணாடிகள்   மலைக்கோவில் பாதையில் கடந்த வாரம் பொருத்தப்பட்டன. வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இந்த கண்ணாடி உதவியாக இருந்தது. இந்நிலையில், 3-வது வளைவில் இருந்த கண்ணாடியின் மேல் ஒரு குரங்கு ஏறி உட்கார்ந்து  தன் முகத்தை பார்த்தது. 130 டிகிரி கோணத்தில் காட்சியளிக்கும் அந்த கண்ணாடியில் குரங்கு முகம் கொடூரமாக தெரிந்தது.  இதனால் அந்த கண்ணாடியை குரங்கு வேகமாக அங்கும், இங்கும் ஆட்டியது. இதில் கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. நேற்று மலைப்பாதையில் இருந்து கீழே இறங்கிய அரசு பஸ், 4வது வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து மதில்சுவர் மீது மோதி நின்றது. குவி கண்ணாடி இல்லாததால் இந்த விபத்து நடந்தது. குரங்குகள் கண்ணாடியை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government bus accident ,Korini ,
× RELATED உடுமலைரோட்டில் நடந்த அரசு பஸ்...