×

நாகை மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாடு கலெக்டர் ஆய்வு

நாகை, ஜன.24: நாகை மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டுத் திட்டத்தின் செயல்பாட்டினை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டார். பின்னர் தெரிவித்ததாவது:நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றம் மாநில மனிதவள மேலாணமை இணைந்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் தமிழகத்தில் கடந்த 10ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளை பயன்படுத்துவதன் மூலமாக அரசின் நிகழ்நேர வரவு மற்றும் செலவு உடனடியாகவும், இதர விவரங்களை எளிமையாகவும் பெற முடியும். மேலும், அரசின் நிர்வாகமும் மேம்பாடும் அரசு அலுவலர்களுக்கு இந்த மென்பொருள் பயன்பாடு குறித்த திறனூட்டல் மாற்று மேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் 468 பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் கீழ் உள்ள 19,354 அரசுப் பணியாளர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் ஊதியம் ஆகியவை தொடர்பான சேவைகளை விரைவாக பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட் உள்ளது. இந்த திட்டத்திற்காக அனைத்து அரசு பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கருவூலத்தில் பட்டியல் ஏற்பளிப்பு செய்தல் பணிப்பதிவேடுகள் மின்மயமாக்குதல் மற்றும் இதர வணிகளை மேற்கொள்ள ஏதுவாக தங்கள் அலுவலகத்தில் கணிணி இணையதள வசதி அச்சுப்பொறி மற்றும் தேவையான மின்னணு கட்டமைப்புகளை முமுவதுமாக சரி செய்து மாவட்ட கருவூலத்தோடு இணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கருவூல அலுவலர் சம்பந்தமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Collector's Research for Integrated Finance and Human Resource Management Application ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...