சசிகுமார் கொலையை தொடர்ந்து கலவரம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கோவை, ஜன.24: கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி, கோவை மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரனிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட பிறகு கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கலவரத்தில் சுமார் ரூ.5 கோடி அளவிற்கு மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 247 வழக்குகளும், 637 நபர்களும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதற்காக கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More