×

கேரளா மீன் பொழிச்சல்

செய்முறை

மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிசறி தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கிவிட வேண்டும். பிறகு மசாலா தடவிய மீனை தோசைக் கல்லில் வைத்து லேசாக இரண்டுபுறமும் வேக வைக்க வேண்டும். பிறகு ஒரு வாழையிலையில் மசாலா தடவிய மீனை வைத்து அதனோடு மேலே தயாரான வதக்கிய மசாலாவையும் சேர்த்து கட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி புரட்டி எடுத்தால் மீன் பொழிச்சல் ரெடி.

Tags : Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு