×

132 பேர் அடங்குவர். தோகைமலை அருகே புழுதேரியில் வேளாண் அறிவியல் மையத்தில் ராபி முன்பருவ முனைப்பு முகாம்

தோகைமலை, ஜன.24:  தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தில் ராபி முன் பருவ முனைப்பு முகாம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா தலைமையேற்று துவக்கி வைத்தார். கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெயந்தி, கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், முதுநிலை விஞ்ஞானி திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் உமா பேசுகையில், வாழையில் புதிய ரகங்களான காவேரி சபா, காவேரி கல்கி மற்றும் காவேரி சுகந்தம் ஆகிய ரகங்களுக்கு பல்வேறு விளக்கம் அளித்தார். மேலும் மண்வள ஆய்வு பயிர் காப்பீடு மற்றும் அறுவடைக்கு பின்செய் நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கினார். வேளாண் இணை இயக்குநர் ஜெயந்தி பேசுகையில், வேளாண் துறை மூலம் கொடுக்கப்பட்ட பயிற்சிகள், மண் ஆய்வு, பயிர் காப்பீடு மற்றும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு பயிற்சிகள், கூட்டு பண்ணைய திட்டம், வேளாண் பொறியியல் துறையின் சோலார் டிரையர், சோலார் பம்ப் செட்டுகள் மற்றும் பண்ணை குட்டைகளின் முக்கியத்துவம், மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையத்தின் மூலம் கரூர் மவாட்டத்தில் அறிவியல் மையத்தோடு இணைந்து மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள், வயல்வெளி பள்ளி பயிற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், வாழை சாகுபடியில் சொட்டு நீர் பயன்பாடு,  மண் தேர்வு, கன்று தேர்வு, நோய் பாதுகாப்பு முறைகள் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை உள்பட பல்வேறு தலைப்புகளில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், உழவர்  உற்பத்தி நிறுவனங்களை சார்ந்த தொழில்நுட்ப காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags : camp ,Rabi Pioneer Initiative ,Worm Science Center ,Wadiyamalai ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு