×

ஏரல் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஏரல், ஜன. 24:  ஏரல் அருகே புதுமனை அம்மாள்தோப்பில் நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விளையாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தொழிலதிபர் உதயகுமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் தங்கையா முன்னிலை வகித்தார். கண்ணன் வரவேற்றார்.
விழாவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஜி ரவி, மாவட்ட அமமுக ஜெ. பேரவை துணை செயலாளர் ரமேஷ், மணியன், முத்துக்குமார், பரணிக்குமார், இசக்கித்துரை, கணேசன், சரவணன், பாலக்குமார், முத்து, ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நண்பர்கள் குழு ரஞ்சித், பாஸ்கர், பாலக்குமார், சரவணன், முத்து, மூர்த்தி, செல்வம் மணி, முத்துராஜ் உட்பட குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Ariel ,
× RELATED ஏரல், அம்மாள்தோப்பில் இலவச மருத்துவ முகாம்