×

எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர் சேர்ப்பு

புதுக்கோட்டை,ஜன.23: மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா கலந்து கொண்டு எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்கள் சேர்க்கையினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடக்க நாளான நேற்று 16 குழந்தைகள் புதிய தாக சேர்க்கப்பட்டனர். இத்துடன் ஏற்கனவே அங்கன்வாடியில் உள்ள 75 குழந்தைகளும் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள். மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : LKG ,UGG ,
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...