×

தாலுகா வாரியாக விவரம் வெளியீடு திருச்சி மாவட்டத்தில் ரூ.104.36 கோடியில் ரேஷன் கார்டுகளுக்கு

திருச்சி, ஜன.23: திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 104 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 287 ரூபாய் மதிப்பில் பொங்கல் தொகுப்பு, ரூ.1,000 மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில், நடப்பாண்டு பொங்கலை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 1,000 ரொக்க பணம் உள்ளிட்டவைகள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தவிர ஏற்கனவே அமலில் உள்ள இலவச, வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.

 திருச்சி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட விவரங்களை தாலுகா வாரியாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி (கிழக்கு) தாலுகாவில் 1,09,169 ரேஷன் கார்டுதாரர்கள், திருச்சி (மேற்கு) வட்டத்தில் 83,813, ஸ்ரீரங்கத்தில் 91,026 லால்குடியில் 78,701, மண்ணச்சநல்லூரில் 57,432, மணப்பாறையில் 66,664, மருங்காபுரியில் 35,054, முசிறியில் 67,804, திருவெறும்பூரில் 62,574, தொட்டியத்தில் 41,455, துறையூரில் 82,009 என மொத்தம் 7,75,701 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.9,81,64,962 மதிப்பீட்டில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணமாக தலா 1,000 ரூபாய் வீதம் மொத்தம் 77,57,01,000 ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இதுவரை 6,19,680 இலவச சேலைகளும், 6,17,344 இலவச வேட்டிகளும் 16,97,58,325 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.
 
 திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 104 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரத்து 287 ரூபாய் மதிப்பில் பொங்கல் தொகுப்பு, ரூ.1,000 பணம் மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,Trichy ,
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்