×

எஸ்பி தலைமையில் ேபாலீசார் ஈடுபாடு

அதிராம்பட்டினம், ஜன. 23:  அதிராம்பட்டினம் பகுதியில் சி விஜில் ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் சி விஜில் ஒத்திகை நிகழ்வு நேற்று காலை துவங்கியது. கடல் மார்க்கம் வழியாக தீவிரவாதிகள்ஊடுருவலை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆபரேஷன் ஹம்லா என்ற பெயரில் ஒத்திகை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று துவங்கிய ஒத்திகை நிகழ்வுக்கு சி விஜில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் கூடுதல் எஸ்பி பாலசந்தர் முன்னிலையில் 200 போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் படகை மறித்து போலீசார் தணிக்கை செய்தனர். நேற்று காலை மீன் பிடித்து விட்டு துறைமுகம் திரும்பிய மீனவர்களிடம் அடையாள அட்டை, படகுக்கான உரிமம் ஆகியவற்றை வாங்கி பார்த்து சோதனையில் ஈடுபட்டனர். தம்பிக்கோட்டை, இராஜாமடம் போன்ற சோதனைசா வடியில் வாகனங்களை மறித்து வாகன தணிக்கையில் போலீசார் ஈடுப்பட்டனர். இரவு பகலாக போலீசார் ஒத்திகை நிகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


Tags : gynecologist ,SP ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’