×

மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டம் துவக்கம்

தஞ்சை, ஜன. 23:  தஞ்சை மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்துக்கான பணியாளர் எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை அரசு அலுவலர்களுக்கு வழங்கி கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தஞ்சை மாவட்ட கருவூல அலகில் 29,004 அரசு பணியாளர்கள், 31,697 ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை இணையதளம் மூலம் எவ்வித காலநிபந்தனையின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும். சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையதளம் மூலம் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பித்த நேரத்திலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் பயனாளியின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்து கொள்ளும் சூழல் இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மின்னணு பணிப்பதிவேடு மற்றும் ஊதிய மென்பொருள் பதிவுகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மின்னணு பணி பதிவேட்டில் செய்யப்படும் அனைத்து பதிவுகளும் உடனுக்குடன் ஊதிய மென்பொருளில் தானாகவே மேம்படுத்தப்பட்டு அரசு பணியாளர்கள் தங்களது ஊதிய விவரத்தை உடனுக்குடன் சரிபார்க்க முடியும். இத்திட்டம் மூலம் அனைத்து பணியாளர்களும் அவரவர் பணிப்பதிவேட்ைட கணினி மற்றும் கைப்பேசி செயலியில் தங்களது கடவு சொற்களை பயன்படுத்தி அறிந்து கொள்ள இயலும் என்றார். மாவட்ட கருவூல அலுவலர் சோமசுந்தரம், கூடுதல் கருவூல அலுவலர் கல்யாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.


Tags : Integrated Finance and Human Resource Management Scheme ,District Treasury Office ,
× RELATED ஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை...