×

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்புத்தூரில் மண்மலைத் திருவிழா

திருப்புத்தூர், ஜன. 23: திருப்புத்தூர் காளியம்மன் கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீமுருகன் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மண்மலைத் திருவிழா நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம்,  திருப்புத்தூர் ஸ்ரீராஜகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீமுருகன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மண்ணை மலையாக்கும் திருவிழா மற்றும் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீமுருகன் திருக்கோயிலிலிருந்து குளம்கரை கூத்த அய்யனார் கோயில் எதிரே உள்ள சேங்கையில் பிடிமண் எடுக்க பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர். பிடிமண் எடுத்து அய்யனார் கோயில் எதிரே நினைத்த காரியம் நடக்க வேண்டி பிடிமண் பூஜை நடைபெற்றது. பின்னர் பெண்கள் பிடிமண் தட்டுகளுடன் நகரின் முக்கிய விதிகளான சிங்கம்புணரி ரோடு, அக்னிபஜார், அச்சுக்கட்டு, பெரியபள்ளிவாசல், செட்டியதெரு, காளியம்மன் கோயில் தெரு வழியாக முருகன் கோயிலை அடைந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்மலை மைதானத்தில் மண் மலையாகக் குவிக்கப்பட்டு தீபமேற்றி மலைக்கடவுள் முருகனை வழிபட்டனர்.
தொடர்ந்து மூலவரான வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீமுருகன் திருக்கோயில் கந்தஷஷ்டி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Mannal Festival ,Tirupurthur ,
× RELATED அவதூறு ஆடியோ பரப்பியதை கண்டித்து திருப்புத்தூரில் கண்டன பேரணி