×

பொங்கல் முடிஞ்சு ஒரு வாரமாச்சு... இலவச வேட்டி, சேலையே காணோம் பொதுமக்கள் புலம்பல்

காரைக்குடி, ஜன. 23: பொங்கல் முடிந்து ஒரு வாரமாகியும் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை விநியோகம் இல்லாததால், காரைக்குடியில் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். காரைக்குடி நகரில் 38 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு, தமிழக அரசின் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொங்கலையொட்டி கடந்த வாரம் அனைத்து கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசின் ரூ.ஆயிரம் மற்றும் பொங்கல் பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பொங்கல் முடிந்து ஒரு வாரமாகியும், நகரில் பல ரேஷன் கடைகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை வழங்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒரு சில கடைகளில் மட்டுமே இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. பல கடைகளில் ஒருவருக்கு கூட இன்னும் இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கழனிவாசல், என்.ஜி.ஓ காலனியில் ரேஷன் கடைகளில், இதுவரை இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ரேஷன் கடைகளின் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான கடைகளுக்கு குறைந்த அளவே, வேட்டி, சேலை வந்திருப்பதால், யாருக்கு கொடுப்பது என தெரியவில்லை’ என தெரிவித்தனர்.


Tags : hairdresser ,daddy ,
× RELATED மலையாளப் படத்துக்கு இசை அமைக்கிறார் அனிருத்