×

நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கம் சீர்காழி மக்கள் மகிழ்ச்சி

சீர்காழி, ஜன.23: சீர்காழி பகுதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சீர்காழி அருகே கோயில்பத்து, அகணி, நிம்மேலி, வள்ளுவக்குடி, கொண்டல், எலத்தூர், வடரெங்கம் வரை மாணவ, மாணவிகளின் நலன் கருதி அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மீண்டும் சீர்காழியிலிருந்து வடரெங்கம் வரை பேருந்து இயக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த 21ம் தேதி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி மாணவர்கள் சென்றது, படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நாகை கலெக்டர் சுரேஷ்குமார் உத்திரவின் பேரில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று சீர்காழியிலிருந்து வடரெங்கம் வரை புதிய பேருந்தை இயக்க சீர்காழி போக்குவரத் துறை அதிகாரிக்கு பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து சீர்காழியிலிருந்து வடரெங்கத்திற்கு புதிய பேருந்து இயக்கப்பட்டனர். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய பேருந்து இயக்க செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நாகை கலெக்டருக்கும் அரசு போக்குவரத்து அதிகாரிக்கும் மாணவ, மாணவிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.




Tags : Sirkali ,
× RELATED சீர்காலி கடைவீதியில் மருத்துவ குணம் கொண்ட செவ்வாழை பழம் விற்பனை