×

பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா

ராமநாதபுரம், ஜன.23: ஆண்டு தோறும் தை மாத பவுர்ணமி தினத்தில் தைபூச திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் காவடி, பால்குடங்கள் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும். ராமநாதபுரம் வடக்குத் தெருவில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 19ம் தேதி முருகப்பெருமானுக்கு காப்புகட்டுதல் வைபவம் நடைறபெற்றது. அன்று மாலை திருவிளக்கு பூஜையும், நேற்றுமுன்தினம் திருபள்ளி எழுச்சி திருமஞ்சனம், மகாகணபதி ஹோமம், சுப்பிரமணியர் ஹோமம், துர்கா ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.பக்தர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து பவனி வந்தனர். பிற்பகலில் மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சுவாமி புறப்பாடு வீதி உலா, மங்கள தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் லந்து கொண்டனர்.

Tags : festival ,Balasubramaniya Swamy ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!