×

127 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்பு

திருப்பூர், ஜன. 23:   தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் துவங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் துவங்க உள்ளோம். தொடக்க நாளான நேற்று முன்தினம் பல பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கி சமூக நலத்துறையின் கீழ் பணிபுரிய உத்தரவிடப்பட்டிருந்தது. இதில் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேரவில்லை. அவர்கள், இன்னும் ஓரிரு நாட்களில் பணியில் சேர்ந்து விடுவார்கள். இதையடுத்து அந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி. வகுப்பிலும், 4 வயது நிரம்பிய குழந்தைகள் யூ.கே.ஜி. வகுப்பிலும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றார்.


Tags : LKG ,Class ,UGG ,127 Anganwadi Centers ,
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...