×

தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கும் மத்திய அரசு!!

டெல்லி : ஒன்றிய அரசின் காயகல்ப் விருதுக்கு தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பாக காயகல்ப் என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஒன்றிய அரசின் காயகல்ப் விருது தமிழ்நாடு அளவில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்பும் இந்த விருது வாங்க காரணம் என தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். காயகல்ப் விருது பெற்றுள்ள செங்கோட்டை அரசு மருத்துவமனை ஏற்கனவே கடந்த 2017,2018,2019 ஆகிய 3 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆறுதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயை பெற்று வந்தது.மாநில அளவில் சிறந்த மருத்துவமனையை தேர்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.அந்த குழுக்கள் அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் சென்று கள ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு மதிப்பெண் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பித்து விருது வழங்கும். அதன்படி, ஒன்றிய அரசு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் ரூபாயை பரிசு வழங்குகிறது.  …

The post தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கும் மத்திய அரசு!! appeared first on Dinakaran.

Tags : Central Government ,Sengota Government Hospital ,Tamil Nadu ,Delhi ,Central Govt ,Dinakaran ,
× RELATED மத்திய அரசின் பல்வேறு துறை காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு