×

கலிங்கப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழா

திருவேங்கடம் ஜன 23: கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.  கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ராம்குமார் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பாராம் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராஜேஷ் வரவேற்றார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வகுப்பு வாரியாக கல்வி மற்றும் விளையாட்டில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ‘மாணவ மாணவிகள் தங்களது பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதித்து ஒழுக்கத்தை கடைப்பிடித்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நானும் இந்தப் பள்ளியில் தான் படித்தேன். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வருகிறேன் என்றார். நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சாம்சன் ஜெப ஜீலியன் நன்றி கூறினார்.

Tags : Kalingapatti ,Government school ,festival ,
× RELATED பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு