×

புதூர் பகுதியில் கிராம சபை கூட்டம்

விளாத்திகுளம், ஜன.23:  தூத்துக்குடி வடக்கு மாவட்டம் புதூர் ஒன்றிய பகுதிகளான சிங்கிலிபட்டி, மேலநம்பியாபுரம், வீரப்பட்டி, கருப்பூர், தோழ்மாலைப்பட்டி கிராமங்களில் திமுக சிறப்பு ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போதுவிவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், குடிநீர் பற்றாக்குறை, சாலை வசதி, பள்ளியில் அடிப்படை வசதி, மருத்துவ வசதி, பஸ் வசதி, கண்மாய்களை பராமரித்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்தனர்.பின்னர் எம்எல்ஏ ராஜா பேசுகையில், உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் கிராமங்கள் சீர்குலைந்து காணப்படுகிறது. தோல்வி பயத்தில் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலகுருசாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் ஜெயகுமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ராஜ், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : meeting ,Gram Sabha ,area ,Pudur ,
× RELATED செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்