×

பிள்ளையன்மனை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயிலில் கும்பாபிஷேக விழா

நாசரேத், ஜன. 23: நாசரேத் அருகே பிள்ளையன்மனை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.  நாசரேத் அருகே பிள்ளையன்மனை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் விக்னேஷ்வரபூஜை, கும்ப பூஜை, தீபாராதனை, புனிதநீர் எடுத்து வருதல் நடந்தது. 2ம் நாள் யாக பூஜை மற்றும் அஷ்ட பந்தன மாலை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாள் கும்பாபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.  ஏற்பாடுகளை நாராயண பிள்ளை, பிரமநாயகம், மாணிக்கவாசகம், அகிலன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : festival ,Pillayanmani Annalandeswari Ambal ,
× RELATED திருத்தணி சுப்பிரமணிய சுவாமி...