×

பிஏபி பகிர்மான கால்வாய் கசிவால் ரயில்வே சுரங்க பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை, ஜன. 22:  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் புதூரில் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் பிஏபி பகிர்மான கால்வாயில் ஏற்படும் கசிவால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள சடையபாளையம் புதூரில் ரயில்வே சுரங்க பாலம் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த பாலம் ஆனைமலை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ளது. இந்த பாலத்தின் மேற்பகுதியில் பிஏபி பகிர்மான கால்வாய் செல்கிறது. கடந்த 18ம் தேதி 3ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பாலத்தின் மேற்பகுதியில் உள்ள கால்வாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சுரங்க பாதையில் குளம்போல் தேங்கி உள்ளது. சுமார் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் முற்றிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் யாரும் சுரங்க பாதையின் கீழ் சென்று விடாதபடி அப்பகுதி மக்கள் கண்காணித்து வருகின்றனர். இதுபற்றி ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக தண்ணீரை பம்ப் செய்து வெளியேற்ற வேண்டும். நிரந்தர தீர்வாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway mining bridge ,PAP ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...