×

குளித்தலை காவிரி ஆற்றில் தீர்த்தவாரி முசிறி கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு

திருச்சி, ஜன.22: திருச்சி கே.கே.நகர் ஈவிஆர் ரோட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் பவுல்ராஜ் (27). இவர் நேற்று முன்தினம் தென்றல் நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த 2 பேர் பவுல்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500ஐ பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த கே.கே.நகர் போலீசார் பணம் பறித்து சென்ற பிரஜேஸ்குமார், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வருடந்தோறும் தைப்பூசத்தன்று குளித்தலை கடம்பர் கோயிலில் தீர்த்தவாரி நடைபெறும். இதில் குளித்தலை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை, மத்தியார்ஜூவேனஸ்வரர், பெட்டவாய்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்ஜூனேஸ்வரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாசலேஸ்வரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமௌலீஸ்வரர், வெள்ளூர் சிவகாமசுந்தரி உடனுறை திருக்காமேஸ்வரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பிகை உடனுறை சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில்களிலிருந்து சுவாமிகள் ஒரு சேர அணி வகுத்து தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். எட்டு ஊர்களிலிருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். இதில் நேற்று முசிறி, வெள்ளூர், திருஈங்கோய்மலை ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் குதிரை வாகனம் முன் செல்ல உற்சவ மூர்த்திகள் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் குளித்தலை கடம்பர் கோயில் அருகே உள்ள காவிரி ஆற்றிற்கு கொண்டு சென்றனர். வழி நெடுகிலும் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஊர்வலத்தில் சிவனடியார்களும், முருக பக்தர்களும் கலந்து கொண்டனர்.




Tags : departure ,Swamigal ,temples ,Cauvery River ,Musiri ,Thirthavari ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு