×

நீர்நிலை ஓரம் வசிப்பவர்களுக்கு மாற்று வீடு கட்டித்தர ஏற்பாடு

ஊட்டி, ஜன. 22: குன்னூர் பகுதியில் நீர்நிலைகளை ஒட்டி பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் என கலெக்டர் ெதரிவித்தார்.  நீர் நிைலகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குன்னூரில் கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள 172 குடும்பங்களி–்ல 77 குடும்பங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவர்களுக்கு மாற்று இடமாக கேத்தி பிரகாசபுரம் பகுதியில் குடிசை மாற்றும் வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும்
வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்க தடையுள்ளதால் இந்த வீடுகள் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் மதிப்பில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 10 சதவீதம் தொகை செலுத்தி இந்த வீடுகளை பெற்றுக் ெகாள்ளலாம். மேலும், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இதேபோன்று நீர் நிலைகளை ஒட்டி வசிக்கும் மக்களும் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு அவிலாஞ்சி பகுதியில் கட்டப்படும் குடிசை மாற்று வாரியம் வீடுகள் வழங்கப்படும். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் நீர் நிலைகளை ஒட்டியுள்ள குடியிருப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல முடியும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Tags : house ,residents ,watershed ,
× RELATED டெல்லியில் அரசு இல்லத்தில்...