×

2 தலைமுறையாக குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா கேட்டு 60 குடும்பங்கள் மனு

மதுரை, ஜன.22: வீட்டுமனை பட்டா கேட்டு 60 குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.    மதுரை மாவட்டம் கிடாரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யம்பட்டியில் 2 தலைமுறைக்கு மேல் 60 குடும்பத்தினர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வீட்டமனை பட்டா கேட்டு கடந்த 2015 முதல் பல முறை மனு கொடுத்தும், அதிகாரிகள் விசாரிப்பதாக கூறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதனால் இப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் 60 குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரி கலெக்டர் நடராஜனிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலூர் தாசில்தாருக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Tags : families ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....