×

‘சிறுபடை வீடுகளிலும்’ தைப்பூசம் கோலாகலம்

திண்டுக்கல், ஜன.22: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
பூச நட்சத்திரம், பவுர்ணமி திதியில் முருகனுக்கு தைப்பூச விழா நடத்தப்படுகிறது. தைப்பூசம் அன்று அசுரனை வதம் செய்த நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் குருவழிபாடு உத்தமம் என்பதால் இந்நாள் பல்வேறு விதங்களில் சிறப்புற்று விளங்குகிறது. இந்நாளில் அறுபடை வீடுகளிலும் தைப்பூச வழிபாடு கோலாகலமாக நடைபெறும். காவடி, பால் அபிஷேகம் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை விரதம் இருந்து செலுத்துவர்.இதன்படி நேற்று பழநியில் இதற்கான நிகழ்ச்சி ஆரவாரமாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள சிறு கோயில்களையும் பக்தர்கள் ‘சிறுபடைவீடாக’ பாவித்து வழிபட்டனர்.

திண்டுக்கல் என்ஜிஓ.காலனி உழவர்சந்தை எதிரே உள்ள முருகன் கோயிலில் அதிகாலையிலே சிறப்பு வழிபாடு துவங்கியது. பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல் ஆர்வி.நகர் கந்தக்கோட்டை, கோவிந்தாபுரம், அபிராமி அம்மன், கோட்டை மாரியம்மன், திருநகர் பழநி ரயில்வே கேட் அருகே உள்ள பாலதண்டாயுதபாணி வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பல்வேறு கோயில்களில்களில் பக்தர்கள் திரளாகக் கொண்டு வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.இதேபோல் ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில், திருமலைக்கேணி முருகன் கோயில், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் உள்ள நாகேஸ்வரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் சன்னதியில் தைபூசத்தை முன்னிட்டு முருகனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வள்ளி தெய்வானை சமேத முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பட்டிவீரன்பட்டி ஐயப்பன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 அய்யம்பாளையத்தில் மலைமேல் அமைந்துள்ள அருள்முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பபட்டது. அய்யம்பாளையத்தில் காந்தி குன்றம் மலை மேல் அருள்முருகன் கோவிலில் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு அருள்முருகனுக்கு சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.  தொடர்ந்து பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்தனர். மலை கோயிலில் அமைந்துள்ள கன்னிமூல கணபதி, கருப்பணசாமி கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Tags : houses ,
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...