×

மருதமலையில் பக்தர்களுக்கு தரமான உணவு வழங்க ஆய்வு

கோவை, ஜன.22: கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மருதமலையில் சுகாதாரமான முறையில் அன்னதானம் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு பக்தர்களிடம் ஏற்படுத்தப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலையில் முருக பக்தர்கள் அன்னதான குடில்கள் அமைத்து, உணவு, நீர்மோர் மற்றும் ஜூஸ் வகைகளை கோவிலுக்கு வரும் பொது மக்களுக்கு நேற்று வழங்கினர். இந்நிலையில், அன்னதானமாக கொடுக்கப்படும் உணவு வகைகள் தரமானதாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை மருதமலையில் ஆறு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து தரமான உணவு வழங்கப்படுவது தொடர்பான ஆய்வு மேற்கொண்டோம். அதன்படி, மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்ட 50 குடில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு இருந்தவர்களிடம் தலைக்கு கேப் அணிந்தும், நகங்களை வெட்டியும் சமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம். மேலும், சமைக்கும் இடங்களில் காய்கறிகள், மளிகை வகைகள் தரமானதாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தியதோடு அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் கலர் பொடிகளை பறிமுதல் செய்தோம். இலவசமாக உணவை வழங்கினாலும் சுத்தமாக வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினோம்.’’ என்றார்.

Tags : devotees ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்