×

சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா தீர்த்தவாரி

கும்பகோணம், ஜன. 22:  சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி நடந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4வது படைவீடாக சுவாமிமலை சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த 12ம் தேதி கொடியேற்று விழா நடந்தது. அப்போது உற்சவர் சண்முகசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதைொடர்ந்து விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், சண்டிகேசர் சகிதமாக உற்சவ மண்டபம் காட்சியளித்தார். இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தது. கடந்த 16ம் தேதி இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 20ம் தேதி தேரோட்டம் நடந்தது.முக்கிய விழாவான நேற்று தைப்பூசத்தைெயாட்டி காலை 10 மணிக்கு தங்க வெள்ளி மயில் வாகனத்தில் காவிரிக்கு சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சவாமி தரிசனம் ெசய்தனர்.திருவிடைமருதூர்:  திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கசுவமி கோயிலில் தைப்பூச பெருவிழா கொடியேற்றம் கடந்த 12ம் தேதி நடந்தது. தைப்பூச பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மதியம் காவிரியில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது.



Tags : festival ,Swamimalai Murugan ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...