×

பழுதான ரேஷன் கடையை சீரமைத்து சுற்றுசுவர் கட்ட மக்கள் கோரிக்கை

சின்னசேலம், ஜன. 22:    சின்னசேலத்தில் உள்ள ரேஷன் கடையை சீரமைப்பதுடன், அங்கு நடக்கும் சமூக விரோத செயலை தடுத்திட சுற்று சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னசேலத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் அருகில் கடந்த 2014ம் ஆண்டு புதிய ரேஷன் கடை சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த கடையில் இருந்து காந்தி நகர், கடைவீதி, தெற்கு ஒற்றைவாடை தெரு, போயர் தெரு, மீனவர் தெரு, வாணிய
பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த ரேசன் கடையில் மாற்றுத்திறனாளிகளும் வந்து பொருட்களை வாங்கி செல்லும் வகையில் ஒரு பக்கம் படிக்கட்டு மற்றும் அதே பக்கத்தில் படிக்கட்டு இல்லாமல் சாய்வு தளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரமில்லாமல் கட்டியதால் சாய்வுதளம் முழுவதும் பெயர்ந்துபோய் கிடக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள் அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலை கடந்த ஒரு ஆண்டாகவே உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
 அதைப்போல இந்த கட்டிடத்தை சுற்றி சுற்று சுவர் இல்லாததால் கால்நடைகள் உள்ளே வருவதுடன், இரவில் சமூக விரோத செயல்களும் நடக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்டிடத்தை சுற்றி மூட்டை கணக்கில் பிளாஸ்டிக் பேப்பர்கள் கிடக்கிறது. அரசு பிளாஸ்டிக் பேப்பர்களை தடை செய்ததுடன் பயன்
படுத்துவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. சில இடங்களில் அபராதமும் விதிக்கிறது. ஆனால் இங்கு கிடக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த ரேசன்கடையை சீரமைப்பதுடன், aசுற்று சுவர் கட்டி, கடையை சுற்றி மூட்டை கணக்கில் கிடக்கும் பிளாஸ்டிக் பேப்பர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா