×

பாரம்பரிய திருவிழா 27ம் தேதி துவக்கம்

புதுச்சேரி, ஜன. 22: அலைன்ஸ் பிரான்சே சார்பில் பல்வேறு அமைப்புகள் இணைந்து முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் வரும் 27ம் தேதி முதல் பிப். 11ம் தேதி வரை பாரம்பரிய திரு விழாவை நடத்துகின்றன.புதுச்சேரியின் பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நடனம், கட்டுரை, கவிதை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. வினாடி வினா போட்டிகளுக்கு இந்த ஆண்டு முதல் தமிழில் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்படுகிறது.
உள்ளூர் மாண்வர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...