×

நாகை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் : 25ம் தேதி நடத்த முடிவு

வேதாரண்யம், ஜன.22: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் முன் வரும் 25ம்தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது. தாரண்யத்தில் ஜாக்டோ ஜியோ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார்.  கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்டார தலைவர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் பார்த்தசாரதி மற்றும் பொறுப்பாளர்கள் கணேசன், விஜயராகவன், மோகன்தாஸ், ஜெயசீலன், முருகானந்தம், பழனிதுரை, அய்யாதுரை, உள்ளிட்டேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் 3500 அங்கன்வாடிகள், சத்துணவு மையங்களை மூடுவதை கண்டித்தும், புதியதாக துவங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், 3500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 22ம் தேதி (இன்று) வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்பாட்டமும், 23, 24ம் தேதிகளில் முற்றுகை போராட்டமும் 25ம் தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.  கூட்ட முடிவில் சாலை பணியாளர் சங்க முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags : Nagator Collector ,
× RELATED நாகை கலெக்டர் அலுவலகத்தில்...