×

குழாய் மூலம் காவிரிநீர் வழங்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு

கரூர்,ஜன.22: வெள்ளியணை பெரியகுளத்துக்கு பைப்லைன் மூலமாக காவிரி தண்ணீர் வழங்க வேண்டும் என குறைதீர்நாளில் விவசாயிகள் மனு அளித்தனர். கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில்,  லாலாபேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ் என்பவர் அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் நோயாளிகளின்  வருகைக்கு ஏற்ப செயல்பாடுகள் இல்லாமல் உள்ளது. அடிப்படை வசதிகள் இந்த  வளாகத்தில் குறைவாக உள்ளதால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். போதிய  வழிகாட்டு முறைகள் இல்லாததால் புதிதாக வரும் நோயாளிகள் கடும் சிரம த்தை  சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதனை கண்காணித்து அனைத்து வசதிகளும்  ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.கரூர் வெள்ளியணை பகுதி மக்கள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: இந்த  பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பத்தினர்கள் உள்ளனர். தற்போது  வறட்சியின் காரணமாக தண்ணீர் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் அனைவரும்  சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, வெள்ளியணை பெரியகுளத்துக்கு பைப்லைன்  மூலமாக விவசாயத்திற்கு காவிரி தண்ணீரை வழங்கி விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 248 மனுக்கள் குவிந்தனமுதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், தொழில் கடன், அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு கோரி க்கை சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து 248 மனுக்களை வரப்பெற்றன.

Tags : caffeine - petitioners ,meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...