×

உலக நன்மை வேண்டி புதூரில் பவுர்ணமி வழிபாடு

நெல்லை, ஜன. 22: புதூர் வாகைகுளம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரையடி அம்மன் கோயிலில்  உலக நன்மைக்காக பவுர்ணமி வழிபாடு  நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், புதூர் வாகைகுளம் கண்மாய் கரையோரம் அமைந்துள்ள கரையடி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பவுர்ணமி வழிபாடு  நடந்தது. இதையொட்டி கருப்பசாமிக்கும், அம்மனுக்கும் மாப்பொடி, மஞ்சட்பொடி, திரவியம், பால்,  தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநி, அன்னம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் புதூர் வாகைகுளம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்று பருவமழை தவறாமல் பெய்து பூமி செழிக்கவும், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரது வாழ்வில் ஏற்றம்பெறவும், தரணியில் அமைதி, மகிழ்ச்சி நிலவவேண்டியும் கூட்டு வழிபாடு நடத்தினர்.

உடன்குடி: இதே போல் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி ராகு, கேது பரிகார ஸ்தலமான  ஞானபிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோயிலிலும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் ஓம் நமசிவாயா  மந்திர ஜெபம் எழுதி வெற்றிபெற்றவர்களுக்கு தொழில் அதிபர்கள் வெற்றிவேல்,  ஜெயராணி  பரிசுகள் வழங்கினர். மாலை 108 திருவிளக்கு  பூஜையை பிரதோஷ அறகட்டளை பொருளாளர் சிவமுருகன் நடத்தினார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோயிலை சுற்றி கிரிவலம் வந்து வழிபாடு மேற்கொண்டனர்.
 ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம்,  பிரதோஷ அறக்கட்டளை செயலாளர் தசீந்திரன்  மற்றும் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags : Pournamy ,world ,
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்