×

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாதலங்கள் களைகட்டியது

ஊட்டி, ஜன. 18: காணும்  பொங்கலை முன்னிட்டு நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் உள்ளூர்  மற்றும் வெளியூர் மக்கள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களை கட்டியது.காணும்  பொங்கல் அன்று பெரும்பாலானவர்கள் சுற்றுலா தலங்கள், கோயில்கள் மற்றும்  வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். நேற்று காணும் பொங்கல் என்பதால், நீலகிரி  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும், வெளி மாவட்டங்களை  சேர்ந்தவர்களும் ஊட்டியை முற்றுகையிட்டனர். உணவை சமைத்து எடுத்து வந்திருந்த இவர்கள்  சுற்றுலா தலங்களில் அங்காங்கே அமர்ந்து சாப்பிட்டனர்.
 பொதுவாக சமவெளிப்  பகுதிகளில் தான் இது போன்று காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில்  அதிகம் கூட்டம் காணப்படும். ஆனால், சிலர் சீசனை அனுபவிக்கவும்,  அதேசமயம் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டத்திற்கு வந்தனர். குறிப்பாக, ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல்  பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதேபோல், நீலகிரி  மாவட்டத்தை சேர்ந்த பலரும் நேற்று பூங்காவை முற்றுகையிட்டிருந்த நிலையில்,  பூங்கா மக்கள் கூட்டத்தால் களை கட்டியது.

Tags : Pongal ,
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...