×

பேரிகார்டுகளில் ரிப்ளெக்டர் பொருத்தாததால் விபத்து அபாயம்

கோவை,ஜன.18: கோவை-திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளில் அதிக அளவு ஒளிரும் பட்டைகள் பொருத்தாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமாக ரிப்ளெக்டர்கள் பொருத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவையில் பிரதான சாலைகளில் ஒன்றாக திருச்சி சாலை உள்ளது. இச்சாலையானது நாகப்பட்டினம் முதல் மைசூரு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச் 67) உள்ளது. இதனால் இச்சாலைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலைகளில் கோவை, சிங்காநல்லூர், சூலூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட போலீஸ் எல்லைக்குட்ட பகுதிகளில் அந்தந்த போலீசார் விபத்து மற்றும் அதிவேகத்தை தவிர்க்கும் பொருட்டு ஆங்காங்கே பேரிகார்டுகள் வைத்துள்ளனர். இதனால் அதிவேக வாகனங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இருந்த போதும் வாகனங்கள் அடிக்கடி மோதியும் கொள்கின்றன. இதில் போதுமான அளவு ஒளிரும் பட்டைகள் பொருத்தாததால் பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் இப்பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அனைத்து பேரிகார்டுகளிலும் விளம்பரங்களே அதிகளவில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து நெடுஞ்சாலை மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பேரிகார்டு வைத்துள்ளனர். இதனால் இவை வைத்துள்ள பகுதிகளில் பீக் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதண் காரணமாக நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் வரும் போது பேரிகார்டு சரியாக தெரிவதில்லை. நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் மணிக்கு 80கிலோ மீட்டருக்கு குறையாமல் செல்கின்றன. பின் திடீரென தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு ஒரு வித பதட்டம் ஏற்படுகிறது. இதண் காரணமாக கட்டுபடுத்த முடியாமல் பலர் பேரிகார்டுகளில்  மோதி விபத்துக்குள்ளாகின்றனர். இதனால் மற்ற நெடுஞ்சாலைகளில் உள்ளது போல் குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னரே பேரிகார்டு குறித்த எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும் பேரிகார்டுகளில் அதிகளவில் ரிப்ளெக்டர் பட்டைகள் பொருத்த வேண்டும். என தெரிவித்தனர்.அன்னூரில் காணும் பொங்கல்  கொண்டாட்டம் அன்னூர்,ஜன.18: அன்னூர் சுற்றுவட்டாரத்தில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.அன்னூர் 11வது வார்டு அங்கப்பமுதலியாா காலனியில் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் எய்ம் பவுண்டேஷன் சார்பில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கபரிசுகள்,எவர்சில்வர்,பித்தளை பாத்திரங்கள்,வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக இளைஞர்களுக்காக கபடி,கிரிக்கெட்,உரியடித்தல்,வழுக்குமரம் ஏறுதல்,சிலம்பம்,ஒட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கு கோலப்போட்டி,கயிறு இழுத்தல்,குண்டு எறிதல்,இசைநாற்காலி,பாட்டுப்போட்டி,நடனபோட்டியும், மாணவிகளுக்கு பரதநாட்டியம், சாக்கு ஒட்டம், தவளை ஓட்டம்,மெதுவாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டன. இதே போல தம்பதிகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைத்தல் போட்டி நடைபெற்றது. இதில் 40 தம்பதியர் பங்கேற்றனர். அன்னூர் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.பொங்கல் திருவிழாவையொட்டி அன்னூரை அடுத்துள்ள மேகிணறு பகுதியில் உள்ள சுயம்பு விநாயகர் ேகாயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடைபெற்றது. இக்கிராமத்தில் உள்ள ஒரே ஒரு கோயிலான விநாயகர் கோயிலின் முன்பாக ஏராளமானோர் பொங்கலிட்டு வழிபட்டனர். பொங்கலை யொட்டி  நடன கோலத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கோயில் முன்பாக பல்வேறு போட்டிகள்
 நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.



Tags :
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி