×

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி

திருத்துறைப்பூண்டி, ஜன.18:   திருத்துறைப்பூண்டியில் கஜா புயலில் சேதமடைந்த இலவச கழிப்பறை கட்டிடம் இதுவரையிலும் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி வேதை சாலை பைபாஸ் ரவுண்டானா அருகில் நகராட்சி  சார்பில் இலவச கழிப்பறை கட்டப்பட்டது. இதை அந்த பகுதியிலுள்ளவர்கள்  மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா  செல்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கஜா புயலில் கழிப்பறை  கட்டிட மேல்கூரை சேதமடைந்தது. தண்ணீர் டேங் சேதமடைந்து இருக்கும் இடம்  தெரியாமல் போய்விட்டது. கஜா புயல் தாக்கி இரண்டு மாதத்திற்கு மேலாகியும்  இன்னும் இலவச கழிப்பறை கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. இதனால் இதனை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்  கருதி இலவச கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : toilet building ,storm ,Ghazi ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...