×

மயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் அகல ரயில் பாதை திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

மயிலாடுதுறை ஜன.18.  மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதை 1926ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. சுமார் 60 ஆண்டுகள் நல்ல  பயன்பாட்டிற்கு பின் கடந்த 1986ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல் சில அதிகாரிகளின் தன்னிச்சையான செயல்பாட்டால் நல்ல நிலையில் இயங்கிவந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை-தரங்கம்பாடி திருநள்ளார்-காரைக்கால் மற்றும் நவக்கிரக கோயில்களுக்கு செல்வோருக்கும், கடல்வழி வியாபாரம் செய்வோருக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களுக்கும் பெரிதும் உதவி வந்த மேற்படி மயிலாடுதுறை-தரங்கம்பாடிரயில் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என்று  பல்வேறு போராட்டங்கள் அனைத்துக்கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புக்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து மயிலாடுதுறை -தரங்கம்பாடி மக்களால் நடத்தப்பட்டாலும் இன்று வரை நல்ல தீர்வு கிடைக்காமல் எட்டாத கனியாகவே உள்ளது. மேலும் காரைக்கால் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி பல்வேறு அனல்மின் நிலையங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் நாகப்பட்டினம் காரைக்கால் மயிலாடுதுறை வழியாக செல்கின்றன. இந்த சரக்கு ரயில்கள் நேரடியாக காரைக்கால் தரங்கம்பாடி மயிலாடுதுறை வழியாக செல்ல வழிபிறக்கும். அதனால் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைப்பதுடன் செலவும் பெருமளவு குறையும்.  மேலும் சுற்றுலாவும் பெருகும். மேலும் காரைக்காலில் தற்போது விமான நிலையப்பணிகள் நடைபெற்றுவதால் மேலும் கூடுதலாக பயணிகள் இத்தடத்தை பயன்படுத்திக்கொள்ளும் நிலையும் எதிர்காலத்தில் ஏற்படும். மேலும் வேளாங்கண்ணி, நாகூர், திருக்கடையூர் வழியாக இந்த ரயில்பாதை அமையும் போது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ரயிலாக இது அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Tags : Railway Minister ,Mayiladuthurai-Tarakampadi ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...