×

காளிப்பட்டி கந்தசாமி கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஆட்டையாம்பட்டி, ஜன.18:   சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் காளிப்பட்டி கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 21ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது. இதையொட்டி கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோயில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கொடியேற்றப்பட்டது. விழாவில் வரும் 20ம் தேதி சுவாமிக்கு சந்தன காப்பும், தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 21ம் தேதி மதியம் 3 மணிக்கு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சேலம் வரதராஜன், நாமக்கல் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.தொடர்ந்து சிறப்பு பூஜை, திருவீதி உலா நடைபெறும். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருச்செங்கோடு, சேலம், சங்ககிரி, ராசிபுரம் ஆகிய ஊர்களில் இருந்து, அரசு ேபாக்குவரத்து கழகம் சார்பில் காளிப்பட்டி கந்தசாமி கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை, கோயில் பரம்பரை அறங்காவலர் தலைமை பூசாரி அம்பிகாபதி மற்றும் நிர்வாக அலுவலர் சுதா ஆகியோர் செய்து வருகின்றனர்.


Tags : Kalipatti Kandasamy Temple ,
× RELATED காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை