×

தரகம்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தினவிழா

கடவூர், ஜன.18: தரகம்பட்டியில் எம்ஜிஆர் பிறந்த தினவிழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். கூட்டுறவு கடன் சங்க தலைவர் சங்கப்பிள்ளை, துணைத் தலைவர் நிஜாம் எம்ஜிஆர் மன்ற முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் முனியப்பன் வரவேற்றார். முன்னாள் சேர்மன் செல்வராஜ் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பசுபதி சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சிவா, மாணவரணி ரமேஷ், கிளைச் செயலாளர் மணி, குமார் மற்றும் ஒன்றிய ஊராட்சி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MGR ,birthday celebration ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...