×

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

காரியாபட்டி, ஜன.18: காரியாபட்டி அருகே ஆவியூரை சேர்ந்த அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
காரியாபட்டி அருகே ஆவியூரை சேர்ந்த அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியைவிட்டு விலகி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிதம்பர பாரதி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்கட்சியை விட்டு விலகிய அதிமுக வார்டு செயலாளர்கள் சுந்தரலிங்கம், பாண்டித்துரை ஆகியோர் கூறுகையில், ‘‘அதிமுக எம்பி தத்தெடுத்த ஆவியூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஒன்றும் இல்லை. திருச்சுழி தொகுதியில் கடந்த மூன்று முறையும் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏவும், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான தங்கம் தென்னரசு தொடர்ந்து வெற்றிபெற்று அனைத்து ஊர்களுக்கும் நல்லது செய்து வருகிறார். எனவே அவரது தலைமையின் கீழ் திமுகவில் இணைந்து செயல்பட விரும்பி இணைந்துள்ளோம்’’ என்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி அவைத்தலைவர் முத்தையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...