பொங்கல் விடுமுறையையொட்டி மருதூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

செய்துங்கநல்லூர், ஜன.18:   மருதூர் அணையில்காணும் ெபாங்கலைமுன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தாமிரபரணி அணைக்கட்டில் மிக நீளமான தடுப்பணை  மருதூர் அணை,  இந்த அணையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து  குவிந்தனர். அவர்கள்அணையில்  குளித்து, அணைக்கட்டில்   குழுவாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.   தூத்துக்குடி, நெல்லை உள்பட பல இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.ெதாடர்ந்து காணும் பொங்கலைகுதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி சேர்ந்த கவிதா என்பவர் கூறியதாவது, நாங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து காணும் பொங்கல் கொண்டாடி வருகிறோம்.   தாமிரபரணி ஆற்றில் மருதூர்  அணைக்கு குடும்பத்துடன் வந்து குளித்து  கூட்டாஞ்சோறு சாப்பிட்டு மகிழ்ந்ேதாம்என்றார். மருதூர் அணை காணும்பொங்கல் கொண்டாட ஏற்ற இடம். ஆயினும் இங்குள்ள  அமலை செடிகள், வேலிகாத்தான் செடிகள், நீர்கருவை மரங்களை அகற்றினால்   மருதூர் அணை மேலும் சிறப்படையும் என தெரிவித்தனர்.

Related Stories: