×

திமுக சார்பில் பொங்கல் விழா

காஞ்சிபுரம், ஜன.18: காஞ்சிபுரம் நகர திமுக மற்றும் 11வது வட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் சன்னதி தெருவில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவுக்கு நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் வரவேற்றார். நகர அவைத்தலைவர் சந்துரு, துணைச்செயலாளர் ஜெகநாதன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பொங்கல் விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பொங்கல்  விழாவில் அவைத்தலைவர் சுகுமார். தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், சிறுவேடல் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pongal Festival ,DMK ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...