×

வத்தல்மலையில் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த கோரிக்கை

தர்மபுரி, ஜன.11: வத்தல்மலையில் வளர்ச்சிப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் வத்தல் மலைப்பகுதியில், சின்னாங்காடு, ஒன்றியக்காடு, மண்ணாங்குழி, பெரியூர், குழியானூர், நாய்க்கனூர், கொட்டலாங்காடு ஆகிய 7 குக்கிராமங்களும், பால்சிலம்பு என்ற குக்கிராமமும் உள்ளன. இக்கிராமங்களில் 498 குடியிருப்புகள் உள்ளது. இந்த 8 கிராமங்களிலும் 1,822 மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களில் விளைவிக்கப்படும் பொருட்கள் தர்மபுரி, சேலம் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வத்தல் மலையை, தமிழக அரசு கடந்த 2012 டிசம்பர் மாதம் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இதையடுத்து வத்தல் மலைக்கு செல்வதற்கு ₹13.14 கோடி மதிப்பில், மலை அடிவாரத்திலிருந்து மலை மீது உள்ள பெரியூர் வரை, 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை வத்தல் மலைக்கு பஸ் இயக்கப்படவில்லை.
இது குறித்து வத்தல்மலை பொதுமக்கள் கூறுகையில், ‘தமிழக அரசு வத்தல்மலையை சுற்றுலா தலமாக அறிவித்தும், எந்த வசதியையும் ஏற்படுத்தவில்லை. வத்தல்மலையை பழங்குடியினர் வாழும் மலையாக அறிவித்து, தனி ஊராட்சியாக்க வேண்டும். வத்தல்மலை மலைப்பாதையை நவீன முறையில் பாதுகாப்பான சாலையாக மாற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், வங்கி கிளை, மக்கள் கணினி சேவை மையம், அரசு மேல்நிலைப்பள்ளி, தோட்டக்கலை அலுவலகம், கூட்டுறவு வங்கி, பால் சொசைட்டி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...