×

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஒரத்தநாடு, ஜன. 11: ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணி, அண்ணா சிலை வழியாக முக்கிய வீதிகளின் வழியாக தாசில்தார் அலுவலகம் வந்தடைந்தது. பேரணியை கல்லூரி முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்தார். பேரணியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமர தட்டுகள், வாழை இலைகள், துணி மற்றும் சணல் பைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஏற்படுத்தினர். பேரணியில் 150 மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...