×

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது - கி.வீரமணி பேட்டி

திருவாரூர், ஜன.11: பொருளாதார அடிப்படையில்  இட ஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று திக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  
 திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் அதன் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம்  கூறியதாவது, பாஜக தனது ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தோல்வி அடைந்தது சரிகட்டுவதற்காகவே இந்த இட ஒதுக்கீடாகும். மேலும் இந்த அறிவிப்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது ஆகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஜாதி வாரியாக மட்டுமே இடஓதுக்கீடு வழங்க முடியும். எனவே பாஜகவின் இந்த முடிவுக்கு விரைவில் மக்கள் மன்றத்தில் சரியான விடை கிடைக்கும். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள சமூக நீதி தலைவர்களை கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags : interview ,K.Veeramani ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு