கரூர் மாவட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு மெஷின் விநியோகம்

கரூர்,ஜன.11: கரூர் மாவட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு மெஷின் விநியோகம் துவங்கியது.
அரசு  மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக் முறையிலான  வருகைப்பதிவு மெஷின் வழங்க அரசு முடிவு செய்தது. கரூர் மாவட்டத்திற்கு  முதல் கட்டமாக 275 மெஷின்கள் வந்துள்ளது. முதன்மைக்கல்வி அலுவலகத்தில் இருந்து இந்த மிஷின்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகி றது. மெஷினை எப்படி இயக்க வேண்டும் என கம்ப்யூட்டர் பயிற்றுனர் மூலம் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பின்னர் நடை முறைக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


× RELATED கரூர் மாவட்டத்தில் 50 கிராமங்களில் கோயில் திருவிழா