×

அரசு மருத்துவமனையில்பிரசவ வார்டின் சுவரில் ஒட்டப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழும் அவலம்

உடுமலை, ஜன. 11: உடுமலை கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரசவ வார்டுக்கு வரும் பார்வையாளர்கள் அமர்வதற்காக, போர்டிகோவில் கிரானைட் இருக்கை உள்ளது. வார்டுக்குள் செல்ல அனுமதி இல்லாததால் பார்வையாளர்கள் இங்கு அமர்கின்றனர்.
இந்த இருக்கையில் உள்ள கிரானைட் கற்கள் சரிவர ஒட்டப்படாததால் அடிக்கடி பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் பார்வையாளர்களும் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. எனவே, கிரானைட் இருக்கையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...