×

போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று திறக்க முடிவு

ேகாவை, ஜன.11: கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் 15 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போதுமான இடவசதியில்லாத நிலையில், போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேசன் சார்பில் 3.40 கோடி ரூபாய் ெசலவில் 11,172சதுரடி பரப்பில் இணைப்பு கட்டடம் கட்டப்பட்டது. 4 தளத்துடன் கூடிய இந்த கட்டடத்தில் 20 அலுவலக பிரிவுகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று இந்த கட்டடத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்கவுள்ளார்.  இணைப்பு கட்டடத்தில் விரைவில் பல்வேறு போலீஸ் பிரிவுகளுக்கு இடம் ஒதுக்கப்படும். குறிப்பாக இடமின்றி வெவ்வேறு பகுதிகளில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் புதிய அலுவலக இணைப்பு கட்டடத்திற்கு மாற்றப்படும் வாய்ப்புள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் 90 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட பழங்கால கட்டடம் கடந்த ஆண்டு சுமார் 1 ேகாடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.

Tags : Office of Police Commissioner ,
× RELATED போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் இன்று திறக்க முடிவு