×

திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம்

தேனி, ஜன. 11: தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பார்பட்டி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடந்தது.தேனி ஒன்றிய திமுக சார்பில் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பார்பட்டி, தப்புக்குண்டு, காட்டுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் ராம்தாஸ், பொருளாளர் பைரவசாமி முன்னிலை வகித்தனர்.

இதில் தேனி மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம்.என்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாஸ்கரன், துணை அமைப்பாளர் பரனீஸ்வரன், பேரூராட்சி செயலாளர்கள் செல்வராஜ், சாந்தகுமார், ஊராட்சி செயலாளர்கள் உப்பார்பட்டி சபாபதி, தப்புக்குண்டு பழனிராம், காட்டுநாயக்கன்பட்டி நந்தகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Tags : council ,meeting ,DMK ,
× RELATED வடக்கு மாவட்ட வழக்கறிஞரணி ஆலோசனை...