×

மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி, ஜன. 11: புதுச்சேரி வேளாண் துறை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் (தரக்கட்டுப்பாடு) மூலம் மண்வள அட்டை மற்றும் மண் மாதிரி சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் பாகூரில் நடந்தது. பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் தனசேகரன் வரவேற்றார். பாகூர் வட்டார இணை இயக்குநர் பூமிநாதன் தலைமை தாங்கி, மண் வள அட்டையின் முக்கியத்துவம் பற்றி கூறினார். துணை வேளாண் இயக்குநர் ராஜேஸ்வரி மண் மாதிரி சேகரிப்பின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்.  வேளாண் அலுவலர் (வேதியியல்) உமாராணி உலகளாவிய இட நிர்ணய குறியீட்டு மூலம் மண் மாதிரி சேகரிப்பு பற்றி எடுத்துரைத்தார். வேளாண் அலுவலர் (வேதியியல்) வேலுமணி மண் வள மேலாண்மை மற்றும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான பேரூட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து பற்றி எடுத்துரைத்தார்.

இணை வேளாண் இயக்குநர் (வேதியியல்) ராகவன் சிறப்புரை  ஆற்றினார். இதில் பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஈகோவென்சர் அதிகாரி மணிமாறன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் முத்துக்குமரன், பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Soil Sample Collection Awareness Camp ,
× RELATED மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்