×

200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

மதுராந்தகம், ஜன.11: மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோத்துப்பாக்கம் ஊராட்சி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக சித்தாமூர் வட்டார வளர்ச்சி  அலுவலர் பத்மா ஜானகிக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டார முழு சுகாதார திட்ட  ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோத்துப்பாக்கம் வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மளிகை கடை, உணவகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட பல கடைகளில் ஆய்வு  மேற்கொண்டனர்.இதில், சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விதமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...