×

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கோனேரிக்குப்பத்தில் பொங்கல் பரிசு வாங்க ரேஷன் கடையில் குவிந்த மக்கள்

காஞ்சிபுரம், ஜன.11: காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ரேஷன் கடையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று அதிகளவில் குடும்ப அட்டைதாரர்கள் குவிந்ததால் ஊழியர்கள் திண்டாடினர்.காஞ்சிபுரத்தை அடுத்த கோனேரிக்குப்பம் ரேஷன்கடையில் 1306 குடும்ப அட்டைகள் உள்ளன. கோனேரிக்குப்பம், தந்தை பெரியார் தெரு, வையாவூர் சாலை, அண்ணா நகர், காமாட்சி நகர், தாமரைத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகள்  கோனேரிக்குப்பம் ரேஷன் கடையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தாமரைத்தாங்கல் பகுதியில் இருந்து, கோனேரிக்குப்பம் ரேஷன் கடை சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து இரண்டு நாட்களாக ரேஷன் கடைக்கு வந்து  செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால்  பரிசுப்பொருள் வாங்க முடியவில்லை. இதனால் இரண்டு நாட்களாக வேலைக்கும் போகமுடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்  தீர்ப்பின் எதிரொலியாக ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களின் கூட்டம் அதிகரித்தது.
கோனேரிக்குப்பம் ரேஷன் கடையில் சர்க்கரை வாங்கும் வெள்ளை அட்டை 94 உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 36 அட்டைதாரர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கி சென்றுவிட்டனர். 58 அட்டைதாரர்கள் பரிசுத் தொகுப்பு வாங்க முடியவில்லை. இதனால் மீண்டும் ஏதாவது புதிதாகத் தடை  வருமோ என்ற அச்சத்தில் அனைத்து அட்டைதாரர்களும் குவிந்ததால் ரேஷன் கடையில் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசு  முறையான திட்டமிடல் இல்லாமல் தேர்தலை கணக்கில் கொண்டு அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு  உள்ளாகியுள்ளனர்.

Tags : ration shop ,Pongal ,Gonerick ,
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா